செவ்வாய், 25 ஜனவரி, 2011

Bootcut

அடடே வாங்க சார். என்ன Bootcut - யாருன்னு தான பாக்க வந்தீங்க.

என்ன பண்ணுறது பிளாகர்ல எழுதனும்னு முடிவெடுத்ததும்  என்ன பெயர் வைக்கரதுன்னு  ரொம்ப யோசிச்சிகிட்டிருந்தப்பதான்  பஸ்ல கூட வந்தவன்  நண்பர்களிடம் பேசிகிட்டிருந்தது காதுல விழுந்தது. தாம்பரதுல  தொடங்கி கோயம்பேடு வரை அவன் Bootcut , Bootcut னுனே  பேசினானா, எனக்கும் எதோ சொல்லுற மாதிரியே இருஞ்சா, சரி எழுதலாமேன்னு bootcut -ஐ தூக்கியாந்துட்டேன்.

ஆமாங்க, வலைபதிவுல இல்லாத பெயர தேடனும்னா நாம ஒரு ரூம் போட வேண்டிருக்கும்.

நான் "ஒண்ணுமில்ல" -னு வைக்கலாம்னு நெனைச்சேன், பேரேயில்லன்னு ஒரு பெயர் பார்த்தேன். அதனால அதை விட்டுட்டேன்.

இதுக்காக நியுமராலஜி, ஜியாலஜி, நேமாலஜினு எல்லாம் தேட முடியல.

இனிமே பேக்கி -னு வெச்சா ஜாக்கி வந்து கேள்வி கேட்பார்.

அதனால பெல்ஸ் -னு வேணும்னா யாரவது பெயர் வைக்கலாம்.

என்னது ஜீன்சா - நான் வரல. லிஸ்ட் போதும்.